Youth Association For Social Services (YASS)
காத்தான்குடியினை மட்டுமல்லாது அகில இலங்கைக்கும் சமூக சேவை மனப்பாங்கு கொண்ட ஓர் இளைஞர் சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் எங்களின் அமைப்பான 'சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பு' YASS ( YOUTH ASSOCIATION FOR SOCIAL SERVICES ) ஆனது 26.08.2011 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு சமூக சேவை நோக்கில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் தூரநோக்காக 'ஈருலகிலும் வெற்றி பெறத்தக்க சமூக சேவை மனப்பாங்குடன் கூடிய ஓர் இளைஞர் சமூகத்தினை உருவாக்குதலேயாகும்.' இத்தூய நோக்கினை நிறைவேற்றும் பொருட்டு எமது இளைஞர் குழாம் பொது நற்பணிகள், கல்வி, தஃவா, விளையாட்டு மற்றும் ஊடகத்துறை என பல சேவைகளினையும் இச்சமூகத்திற்காக வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷேட அம்சமாகக் காணப்படுகின்றது. எமது அமைப்பானது வெறுமென 21 ஸ்தாபக அங்கத்தவர்களுடன் மட்டும் சுருங்கிக் கொள்ளாது இதில் ஏனைய அங்கத்தவர்களாக 250 இற்கும் மேற்பட்டவர்கள் அங்கம் வகிக்கின்றனர். அது மாத்திரமின்றி இவ்அமைப்பிற்கான அங்கத்தவர்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.