4 பெண்கள்
Chennai
‘4 பெண்கள்’ எதற்காக?
வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி. நம் வீடுகளில் இன்னும் 5 ஆண்டுகளில் இணைய பயன்பாடு அத்தியாவசியமான விஷயமாகப் போகிறது. இதுவரை ஆண்களின் கைகளில் இருந்த இந்த அற்புத கண்டுபிடிப்பை இனி அதிகம் பயன்படுத்தப்போவது பெண்கள்தான்! பெண்களுக்கான விஷயங்கள் தமிழில் கிடைப்பது மிக மிகக் குறைவு. ஆங்கிலத்தில் கடலளவு பரந்துவிரிந்திருக்கும் விஷயங்களில் ஒரு சிறு அளவுக்காவது தமிழில் தர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே ‘4 பெண்கள்’ என்ற இந்த வலைதளம்.
பொதுவாக பெண்கள் எழுதும் வலைதளம் என்றாலே சமையல், கவிதை, குழந்தை வளர்ப்பு, பெண்ணியம் போன்றவற்றை மையப்படுத்தியதாகவே இருக்கும். இவை மட்டும் பெண்கள் புழங்கும் வெளி அல்ல..இவற்றையும் கடந்து அரசியல், பொருளாதாரம் என்று பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய துறைகளையும் உங்களுக்கு தர இருக்கிறோம், இவற்றையும் தருகிறோம். நேர்மையான வாழ்க்கைப் பாதையைக் காட்டிவிடும் அத்தனையையும் நாங்கள் செய்ய விரும்புகிறோம். எங்களுடன் இணைய நீங்களும் வரலாம்…
mail: fourladiesforum@gmail.com