ஸ்ரீநிவாசன் அண்ணாமலை

நான் நட்பை விரும்பும் நட்பானவன். சிறந்த நட்பை உயிரினும் மேலாக கருதுபவன். உண்மையான அன்பை மிகவும் மதிப்பவன். உண்மையான அன்பின் அழகை மிஞ்சியது இவ்வுலகத்தில் எதுவும் இல்லை என்று ஆணித்தரமாக நம்புவன்.

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக உழைத்துக்கொண்டிருப்பதால் நிறைய அனுபவங்களைப் பெற்றவன். என்னுடைய அனுபவம் மற்றும் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ, அவர்களுடைய அனுபவம் மற்றும் அறிவிலிருந்து கற்றுக்கொள்ளவோ எப்போதும் தயங்காதவன்.

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் எனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதிக்க நித்தமும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன்.