கார்த்திக் புகழேந்தி

Writer, Editor, and Public Speaker in Chennai, India

Watch my videos

கார்த்திக் புகழேந்தி | [email protected]

இயற்பெயர் : கார்த்திக் முருகன்
பிறப்பு : 27 ஜனவரி 1988
ஊர் : பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

2011ம் ஆண்டு முதல் தமிழ் படைப்புலகில் எழுதத் தொடங்கியவன்.கரிசல் எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் ஆசிரியராக உள்ள கதைசொல்லி நாட்டுப்புற சிற்றிதழின் உதவி ஆசிரியராக ஆரம்பித்து, வெகுஜன மற்றும் கலை இலக்கிய சிற்றேடுகளில் இயங்கியிருக்கிறேன். தற்போது சென்னையில் பத்திரிகைக்காரனாகப் பணியில் இருக்கிறேன்.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு‘வற்றாநதி (2014) அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்தது. ‘ஆரஞ்சுமுட்டாய் (2015), ‘அவளும் நானும் அலையும் கடலும்’ (2017) சிறுகதைத் தொகுப்புகளும், ‘ஊருக்குச் செல்லும் வழி(2017) கட்டுரைத் தொகுப்பும் ஜீவா படைப்பக வெளியீடாக வெளிவந்துள்ளன.

வலசை -The Migrationஎனும் 19ம் நூற்றாண்டு காலத்தைய வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல் ஒன்றிற்கான களப்பணிகள் செய்துக் கொண்டிருக்கிறேன்.

திருநெல்வேலி மாவட்ட வட்டாரப் பேச்சு வழக்குதான் என்னுடைய எழுத்து மொழி. தமிழ் சிறுகதைப் பரப்புக்குள் மிகுந்த ஈடுபாட்டோடு எழுதவும் வாசிக்கவும் செய்கிறேன். அதன் மிகச்சிறந்த அங்கிகாரமாக “வெட்டும்பெருமாள் (2015)” சிறுகதை, டெல்லி நேஷனல் புக் ட்ரஸ்ட் நிறுவனத்திற்காக எழுத்தாளர் ஜோ டி குருஸ் தொகுத்த, நவலோகன் 2015 - தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைக் கட்டியமைத்த தோழர் ஜீவானந்தம் மேலுள்ள அன்பினால், அவர் பேராலே ஜீவா படைப்பகம் என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் புத்தக வாசிப்பு, வடிவமைப்பு, வெளியீடு படைப்பூக்கம் உள்பட பலபட்ட பணிகளைச் செய்துகொடுக்கிறேன்.

ஜீவா படைப்பக வெளியீடுகளாக, ஐயா, திரு.நெல்லை கண்ணன் அவர்களுடைய “குறுக்குத்துறை ரகசியங்கள்”, புதுமுக எழுத்தாளர் விஷால் ராஜாவின் “எனும்போதும் உனக்கு நன்றி” சிறுகதைத் தொகுப்பு ஆகியன வெளியாகியுள்ளன. மேலும், எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்களுடைய “வேர்பிடித்த விளைநிலங்கள்” தன்வரலாற்று நூலும், குறும்பனை சி பெர்லின் அவர்களுடைய “சேலுகேடு” நாவலும் எங்களது அடுத்தக்கட்ட வெளியீடுகளாக அச்சில் உள்ளன.

மின்னஞ்சல்: [email protected]