பறையோசை பதிப்பகம்

பி. அழகாபுரி

தனி ஒருவரின் உடைமையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் நாங்கள் ஒரு குழுவாக இயங்குபவர்கள். சமூக மாற்றத்திற்கான நல்ல நூல்களை வெளியிடவேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்.
எங்கள் பதிப்பகத்திற்கான விளம்பரத் தளமாக இந்த பறையோசை இடுக்கை தொடங்கப்பட்டாலும் அதற்கு அப்பாற்பட்டு பல நல்ல செய்திகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் இவ்விடுக்கைகுள் ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளோம்.
குட்டி முதாலாளித்துவம், நடுத்தர பொருளாதார குடும்பப் பின்னணியிலிருந்து மார்க்ஸிய கோட்பாட்டாளராக மாற்றம் பெற்றவர்கள் நாங்கள் என்பதால் இப்பின்னணியினரின் சிந்தனை மற்றும் நடைமுறையிலிருந்து மார்க்ஸிய கோட்பாட்டிற்கு இம் மக்களை வளர்த்தெடுப்பதற்கும், தொழிலாளர் வர்கம் இப்பின்னணியினரின் பொய் பித்தலாட்டங்களில் மயங்கிடுவதைத் தடுப்பதற்கும் எங்களை இப்பூவலைக்குள் இணைத்துக் கொண்டுள்ளோம்.
நாங்கள் மார்க்ஸிய கோட்பாட்டாளராக, நாத்திகர்களாக இருந்தாலும் எதிர் கருத்துள்ளவர்களும் தங்கள் கருத்துக்களை எழுத, விமர்சிக்க, அதன் மூலம் பலரும் கருத்தாய்வுகள் செய்ய ஏற்றவாறு இவ்வலைத்தளத்தை இயக்க விருப்பப்பட்டுள்ளோம்.
எனவே நண்பர்களே! தோழர்களே! உங்களின் கருத்துக்களை கட்டுரையாக, கவிதைகளாக, ஓவியங்களாக, பாடங்களாக, ஒலி – ஒளி வடிவங்களாக எவ்வகை வடிவங்களிலும் எழுதலாம். உங்களின் எழுத்துக்கள் நாகரீகமாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே எங்களது வேண்டுகோள். எழுத்துப் பழக்கம், முறைப்படுத்தி விவரம் தரும் பழக்கம் இல்லாதவர்களும் இதில் எழுதலாம். அதனை தங்களின் அனுமதியுடன் சிற்சிலத் திருத்தங்கள் செய்து பதிவு செய்கிறோம். அதன் மூலம் கிடைக்கும் விமர்சனங்களின் ஊடாக உங்களை நீங்களே நல்ல எழுத்தாளராக, சிந்தனையாளராக வளர்த்துக் கொள்ளலாம்.
வலைத்தளத்திற்குள் விமர்சனம் செய்ய வசதியற்றோர் அல்லது தட்டச்சு செய்வதில் பழக்கமற்றவர்கள் கடிதமாக எங்களுக்கு எழுதியனுப்புங்கள். நாங்கள் தட்டச்சு செய்து பதிவு செய்கிறோம்.
நன்றி!
இவண்,
பதிப்பகக் குழு.

எமது முகவரி:
பறையோசைப் பதிப்பகம்,
1/171, கடை வீதி,

பி.அழகாபுரி

கீழச்செவல்பட்டி, 630 205
சிவகங்கை மாவட்டம்,
தமிழ் நாடு.
இந்தியா.
மின்னஞ்சல்: [email protected]
அலைபேசி : 94879 85126.

  • Work
    • பதிப்பகம்