yaanan
இன்பம், துன்பம், ஏமாற்றம், அவமானம், ஆசீர்வாதம், அரவணைப்பு யாவும் எனது பயணத்தில் கலந்தே கடந்து சென்றிருக்கின்றன. ஒரு நல்ல சிறுகதை அமையும் வரை எழுதியதை அடித்து திருத்தி மீண்டும் மீண்டும் எழுத முயல்வதைப்போலவே நாளும் வாழ்க்கை நகர்கிறது.
சொந்த ஊர் என எதையும் சொல்வதில்லை. உண்மையில் சொந்தம் என்று எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில காலம் சில, சொந்தமானவைப் போல் தொடருகின்றன.
பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான் மரங்களில் தான் பார்க்கிறேன். என்னைத் தூண்டும் சக்தியாக மரங்கள் இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேலான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். மரணத்திற்கு முன்பாக மேலும் பல நடக்கூடும்.
நான் எழுதும் ஆத்ம ஞான கருத்துகளே எனது அழமான நம்பிக்கை. அதுபோலவே எனது வாழ்க்கையையும் உணருகிறேன்.